டெங்கு நோயிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம் - அதிகம் பகிருங்கள்

டெங்கு நோய் இலங்கையில் பல இடங்களில் பரவிவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முக்கியமாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களில் மிக வேகமாக பரவுவதை அவதானிக்கலாம். மார்ச் மாதம் வரையில் இலங்கையில் 21000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மரணங்களும் ஏற்பட்டுள்ளது. 

உங்களுக்குத் தெரியும் திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் கடந்த நாட்களில் 13 நோயாளிகள் டெங்கு நோயால் இறந்துள்ளனர். அத்துடன் 1500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் நாடுபூராக விட்டு விட்டு அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்நோய் மேலும் நுளம்புகளால் பரவுவதற்கான ஆபத்தான நிலை காணப்படுகிறது. 

இந்த டெங்கு நோய் ஒரு வகையான கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வைரஸ் ஊடக நுளம்புகள் மூலம் பரப்பப் படுகின்றது. இதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நாம் இந்த டெங்கு நோயை பரப்பக்கூடிய நுளம்புகள் பரவும் இடங்களை எமது சூழலில் இருந்து முற்றாக அகற்றவது மிக முக்கியமாகும். 

இலங்கையில் 140 க்கும் மேற்பட்ட நுளம்பு வகைகள் காணப்படுகின்றது. அவற்றில் இரண்டு வகையான நுளம்புகளே டெங்கு நோயை பரப்புகின்றது. இந்த இரண்டு வகையான நுளம்புகளும் ஓடாமல் தேங்கிநிற்கும் தெளிவான நீரில் தான் முட்டை இட்டு தனது இனத்தை பெருக்குகின்றது. எனவே எமது சூழலில் இருந்து இவ்வாறான நீர் தேங'கி நிற்கும் இடங்களை முற்றாக அகற்றுவோமாயின் இந்த டெங்கு நோயிலிருந்து மிக இலகுவான முறையில் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

டெங்கு நோயை பரப்பக்கூடிய நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களைப் பார்ப்போமானால்:

எமது வீட்டுக் கூரையிலுள்ள பிளாஸ்டிக் மற்றும் சீமெந்திலான நீர்த்தாங்கிகள் (TANK) மற்றும் நீரை சேகரித்து வைக்கக்கூடிய பொருட்கள். இவை அனைத்தையும் நுளம்பு புகாதவாறு நெட்டினால் மூடி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்க முடியாத பட்சத்தில் இவை அனைத்தையும் வாரத்திற்கு ஓரு முறை நன்றாக தேய்த்து கழுவுவதன் மூலம் இந்த நுளம்புகள் பெருகுவதை இல்லாமலாக்கலாம்.

இது தவிர எமது கூரையில் மழை நீர் வடிந்து செல்வதற்காக வைத்துள்ள பீளியில் இலை, குழைகள் சேர்ந்து இருக்கலாம். அல்லது இவை வெயிலுக்கு வளைந்து, நெளிந்து இருப்பதன் மூலம் நீர் தேங்கி நிற்கலாம். இதன் மூலமும் இந்த நுளம்பு பெருகுவதற்கான அபாயம் காணப்படுகின்றுது. எனவே இந்த பீளிகளை வாரத்திற்கு ஒரு முறை துப்புரவாக்குவது அவசியமாகும். 

அத்துடன் வீட்டுக்கு அருகில் பாவித்து விட்டு வீசுகின்ற பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், பொலித்தின் உரைகள் மற்றும் பேக்குகள்இ பொலித்தினினால் மூடிவைக்கப்பட்டுள்ளவைகள் போன்றவற்றிலும் நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பரவுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். எனவே இவற்றை சரியான முறையில் நீர் தேங்கி நிற்காதவாறு அகற்ற வேண்டும்.

இது தவிர சிரட்டை, குறும்பை, யோக்கட் கோப்பைகள், தயிர் சட்டிகள், அலங்கார பூச்சாடி அல்லது அதற்கு கீழ் வைக்கப்பட்டுள்ள ட்றே (TRAY) அல்லது பாத்திரங்கள் போன்றவற்றில் பரவலாம். இன்னும் சில பூச்சாடிகளிளே மண் இறுகி இருக்கும். இதில் நீர் தேங்கினாலும் நுளம்பு பரவலாம். இத்துடன் வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கி இருக்கும் இடம் காணப்படுகின்றுது இதனை ஓரு நெட் போட்டு நுளம்பு போகாதவாறு வைக்கலாம். இந்த பாத்திரத்தையும் வாரத்திற்கு ஒரு முறை பிரஷ் (டிசரளா) ஒன்றினால் தேய்த்து கழுவி நீரை அகற்ற வேண்டும். 

கிணறுகள், குழாய் கிணறுகளிலும் நுளம்பு பெருகக் கூடிய வாய்ப்பு உள்ளது. எமது சுகாதார அதிகாரிகளை அணுகி அவர்களின் ஆலோசனைகளுடன் வீட்டில் உள்ள இவ்வாறான இடங்களுக்கு இரசாயணப் பொருட்களை இடுவதன் மூலமும் இந்த டெங்கு நோய் பரவுவதை தடுக்கலாம். 

அத்துடன் கிணறு, நீர் தடாகம் இவற்றுக்கு கப்பிஸ் எனப்படும் மீன் வகைகளை இடுவதன் மூலமும் நுளம்பு பெருக்கத்தை குறைக்கலாம். இவ்வாறு வீட்டில் வெவ்வேறான இடங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்கள் இருக்க முடியும். இவற்றை தேடிக் கண்டுபிடித்து அகற்றுவதன் மூலம் எமக்கும் அண்டை வீட்டாருக்கும், எமது ஊரில் உள்ள அடுத்தவர்களுக்கும் இப் பயங்கரமான நோய் பரவுவதில் இருந்து மிகவும் சுலபமான முறையில் பாதுகாக்க முடியும். 

அத்துடன் பழைய டயர்களில் நீர் தேங்கி இருக்குமானால் டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகமாக ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பழைய டயர்களை நாம் முறையாக அகற்றுவதன் ஊடாக டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை குறைக்க முடியும். 

எனவே, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து இந்த நீர் தேங்கும் ஆபத்தான இடங்களை அகற்றுவதன் மூலம் வேகமாக அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். 

எனவே சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், வாலிபர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட்டு இதனை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அன்புடன் அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏமது சுற்றுப்புற சூலை தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக எதிர் வரும் ஜும்முஆ தினங்களில் மக்களுக்கு அறிவூட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
Dr. Mohammed Hussain Mohammed Naseem
MD (Cuba), Msc in Disaster Management (university of peradeniya) 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -