பாவனாவின் கடத்தல், பாலியல் துன்புறுத்தல் வீடியோ முகநூலில் - நீதிமன்றம் நடவடிக்கை

டிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி, புகைப்படங்களும் வெளியிடுவதை தடுத்து நிறுத்த முகநூல் நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி படமும், புகைப்படங்களும் தங்களிடம் இருப்பதாக 'முகநூல்' பக்கம் ஒன்றில் ஒருவர் தமிழில் குறிப்பிட்டு இருந்தார். 

அந்த காட்சிகளை பகிர்ந்துகொள்வதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார். அதில், ஒரு தொலைபேசி எண்ணும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், பாலியல் காணொளிக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை விதிக்கக்கோரி 'பிரஜ்வாலா' என்ற தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றில் பி.லோகுர் தலைமையிலான சமூகநீதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அபர்ணா பட், நடிகை பாவனா காணொளியை வெளியிடப்போவதாக 'முகநூல்' பக்கத்தில் வெளியான தகவலை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -