திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் வேண்டுகோளுக்கிணங்க சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுன்கவின் நிதிதுக்கீட்டில் சுமார் 40 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீதிகள் இன்று காலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டன.
திருகோணமலையிலுள்ள முக்கிய சுற்றுலாத்துறைப் பகுதிகளான கன்னியா வெந்நீரூற்று நிலாவெளி கடற்கரைக்குச் செல்லும் வீதிகளே இவ்வாறு புனரமைப்பு செய்யப்பட்டதாகும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச, கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ ,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, கிழக்குமாகாண அமைச்சர் ஆரியவதி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின் அமைச்சினால் திருகோணமலை மாவட்ட சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.