சப்னி அஹமட்-
கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை (04) கல்முனை மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிடல் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அப்துல் றஸாக் (ஜவாத்), ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட துணைத் தலைவர் அப்துல் மஜீட், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ. காதிர் உள்ளிட்டவர்களுடன் அமைச்சின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.