அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ அன்சில் தனது பதவியினை இராஜினாமாச் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய அன்சில் தனது பதவியினை இராஜினாமாச் செய்வதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருக்கு அறிவித்துள்ளார். தனிப்பட்ட சில காரணங்களுக்காக குறித்த முடிவினை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.