அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 08ம் ஆண்டு மாணவர்கள் இருவர் போதையை ஏற்படுத்தும் வகையில் ஒரு வகையான தூள் வைத்திருந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
08ம் ஆண்டு மாணவன் பேப்பர் தாளொன்றில் நான்கு பெகட்டாக பகட் செய்யப்பட்ட நிலையில் 30 ரூபாயிற்கு மற்றுமொறு மாணவனுக்கு விற்பனை செய்த வேளை பாடசாலை அதிபருக்கு தெரியவந்ததாகவும் பாடசாலை பழைய மாணவரொருவர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் தூள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
தூள் எங்கிருந்து பெறப்பட்டமை தொடர்பில் அம்மாணவனிடம் கேட்ட போது பாடசாலைக்கு வராத 18 வயதுடைய நபர் 30 ரூபாய் வீதம் விற்பனை செய்து தருமாறு கூறியதாகவும் பாடசாலை அதிபர் முன்னிலையில் அம்மாணவன் தெரிவித்தார்.
மாணவனுக்கு போதை வரக்கூடிய தூள் பெறப்பட்டதை தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் பாடசாலையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.