விடுதலையான ஏராவூர் பொலீஸ் உத்தியோகத்தருக்கு நியாயம் கிடைக்குமா.?

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
2003ம் ஆண்டு ஏராவூர் பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கைது செய்யபட்டு அதன் பின்னர் பதின் மூன்று வருடங்களாக தான் வகித்த பொலீஸ் உத்தியோகத்தர் பதவியினை இழந்து நீதிமன்ற வழக்கினை சந்தித்து வந்த ஏராவூரை  சேர்ந்த பொலீஸ் உத்தியோகத்தர் மீராசாஹிப் அப்துல் ஹலீம் என்பவர் சென்ற கிழமை நீதிமன்றத்தினால் தன்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனது சேவை காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் பொலீஸ் தினைக்களத்திற்காக செயற்பட்ட அப்துல் ஹலீம் ஏராவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையானது முற்றாக ஒழித்து கட்டப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் செயற்பட்ட ஒருவருமாவார். அது மட்டு மல்லாமல் மீண்டும் அப்துல் ஹலீமிற்கு குறித்த பொலீஸ் உத்தியோகத்தர் பதவியானது இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு மீண்டும் அவர் தனது சேவையினையும், ஏராவூர் பிரதேசத்திலிருந்து முற்றாக போதைப்பொருளினை ஒழிப்பதற்கான தன்னாலான ஒத்துளைப்பினையும் வழங்க வேண்டும் என பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்களும், பிரதேசத்து மக்களும் ஹலீமிற்காக குரல் கொடுத்து வருகின்றனர். 

பதின் மூன்று வருடங்களாக எதுவித வருமானமும் இன்றி மூன்று பிள்ளைகளுடன் தனது குடும்பத்தினை வழி நடாத்திச் சென்ற அப்துல் ஹலீம் தனக்கு பதின்மூன்று வருட காலத்திலும் செலுத்தப்பட வேண்டிய அடிப்படை சம்பள தொகையுடன் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது பொலீஸ் உத்தியோகத்தர் பதவியும் மிக விரைவில் கிடைப்பதற்கு இந்த நாட்டின் நல்லாட்சி அரசாங்கம் முயற்சி எடுத்து செயற்பட வேண்டும் என அரசாங்கத்தினை வேண்டி நிற்கின்றார். 

அத்தோடு ஏராவூர் பிரதேசத்தில் உள்ள அரசியல் தலைமைகளான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பராளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மெளலான, முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத், மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஹாஜி மற்றும் மாவட்டத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி போன்றவர்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று தனக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நியாயம் கிடைப்பதற்கு சிபார்சு செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த பிரதேசத்து மற்றும் மாவட்ட அரசியல் வாதிகளையும் வேண்டி நிற்கின்றார்.

அத்தோடு பாதிக்கப்பட்ட பொலீஸ் உத்தியோகத்தர் அப்துல் ஹலீம் தனது நியாங்களையும் அரசாங்கத்திற்கு விடுக்கும் வேண்டுகோளினையும் ஊடக மயப்படுத்தும் முகமாக தனது ஆதரவாளர்களுடன் வழங்கிய கருத்துகள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -