திருகோணமலை: பாடசாலை பெற்றோரால் பலவந்தமாக மூடப்பட்டது

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது அப்பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களின் பெற்றோர்களினால் அப்பாடசாலையின் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு பலவந்தமாக மூடப்பட்டது. இப்பாடசாலையில் 309 மாணவர்கள் பல்வி பயில்கின்றபோதிலும் 5 ஆசிரியர்களே உள்ளனர் என்றும் குறைந்தபட்சம் மேலும் 5 ஆசிரியர்களாவது வேண்டும் என அப்பாடசாலையின் அதிபர் டு.பாலசூரிய குறிப்பிடுகின்றார். 

தொடர்ந்தும் இது சம்பந்தமாக வலயகல்வி அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உட்பட்டோருக்கு தெரியபடுத்தி அதற்கு அவர்கள் குறைந்த பட்சம் இரு ஆசிரியர்களை தறுவதாக உறுதியளித்தும் இன்று வறை அவ்வுறுதி நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து உறிய அதிகாரிகளிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் பாடசாலையை மூடுமாறு கூறியதால் பெற்றோராகிய நாங்கள் பாடசாலையை மூடியதாக அப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -