நிந்தவூர் சந்தையில் நடப்பது என்ன...? ஏன் இப்படி..?

நிந்தவூரில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வாரத்தில் ஒருநாள் மலிவுச் சந்தையில் சந்தை இடைத்தரகர்கள் முந்திய வாரங்களை விட இவ்வாரம் அதிகரித்தே காணப்படுகின்றார்கள். இத்தரகர்களின் வேலை என்னவென்றால் மலிவுச் சந்தைக்கு பொருட்களை கொண்டுவந்து மலிவு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளிடமிருந்து "கொமிசன்" அடிப்பதற்காக அங்கு தரகர்கள் மலிவு விலை பொருட்களை அவர்கள் இஷ்டத்திற்கு விலை கூட்டி விற்பனை செய்துகொடுப்பதை சற்று அவதானிக்கமுடிந்தது அந்த வகையில் இன்று ஒரு சந்தை தரகரோடு ஒரு சகோதரர் வாய்த் தகராறு ஏற்பட்டு வாக்குவாத சண்டையும் ஏற்பட்டுள்ளதையும் நேரில் காணமுடிந்தது.

ஒரே வகையான பொருட்கள் பல வியாபாரிகளிடம் வித்தியாசமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது காரணம் அங்கு தரகர்கள் நின்று வியாபாரம் செய்யும் இடத்தில் விலை கூடுதலாக கூறப்படுவதையும் நேரில் அவதானிக்கமுடிந்தது. இந்நிலை வியாபாரம் தொடருமானால் எதற்கு இப்படியொரு மலிவுச் சந்தை ("பொல") என்று மக்களிடம் கேள்வியும் எழுந்துள்ளது.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிள் மக்களின் கேள்வியை கருத்தில் கொண்டு இந்நிலையை சீர் செய்துகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முஹம்மட் ஜெலீல்- நிந்தவூர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -