பிரபலங்களின் லீலைகளை டுவிட்டரில் வெளியிட்ட பாடகியின் லீலைகளும் வெளியாகின..?

திரையுலக பிரபலங்களின் லீலைகளை வெளியிட்டதாக கூறப்படும் பின்னணி பாடகியின் லீலைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரின் திரைமறைவு லீலைகளை பிரபல பின்னணி பாடகியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி திரையுலகையே பரபரப்பாகியது. அதில், கொலவெறி நடிகரை சுற்றித்தான் நிறைய புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்தது. அதேபோல், கொலவெறி நடிகர் மீதான தாக்குதல்கள்தான் அந்த டுவிட்டரில் அதிகப்படியாக இருந்தது.

இந்நிலையில், கொலவெறி நடிகரின் ரசிகர்கள் அந்த பின்னணி பாடகிக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.. தங்களுடைய தலைவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடும் பின்னணி பாடகி மட்டும் ஒழுங்கா? என்ற அடிப்படையில்,, பின்னணி பாடகி, பொது மேடையிலேயே மற்ற நடிகர்களுடன் எப்படி நெருக்கமாக ஆடிப்பாடுகிறார்? என்பதற்கு சான்றாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

அந்த வீடியோவில், தனியார் தொலைக்காட்சி நடத்திய பிரத்யேகமான நிகழ்ச்சி ஒன்றில் பாடகி, தான் பாடிய பாட்டுக்கு ஒரு நடிகரோடு சேர்ந்து நடனமாடுகிறார். நடனத்தின்போது அந்த நடிகரை பாடகி இழுத்து, கட்டிப் பிடித்து ஆடுவது போல் உள்ளது. நடிகருடன் நெருங்கி ஆடும் இந்த பின்னணி பாடகி, மற்றவர்களின் அந்தரங்கத்தை பற்றி குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? என்பதுதான் அந்த ரசிகர்களின் ஆதங்கம் என்று கூறப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -