கிண்ணியாவில் டெங்கைக் கட்டுப்படுத்த அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை..!

கிண்ணியாவில் டெங்குத் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதன் நகர சபைக்கு போதியவளங்கள் இன்மையினால் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நலையில் இன்றைய தினம் கிண்ணியா சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையில் ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற கலந்தரையாடலின்போது கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்ஜே எம் அன்வர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் அங்குள்ளகுறைபாடுகளை எடுத்துரைத்தார்,

இவற்றை சாவதனமாக செவிமடுத்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்குள்ள குறைபாடுகள் தொடர்பான விபரங்களைபெற்று அவற்றில் உள்ளஅனைத்து குறைபாடுகளை உடன் நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்தார்.

இதில் பல மில்லியன் ரூபாபெறுமதியான பொருட்கள் உள்ளடங்குவதன் அவற்றுள் டிப்பர் வண்டிகள்,ட்ரெக்டர்கள் மற்றும் நீர்த் தாங்கிகள் என ஏராளமானபொருட்கள் அதில் அடங்குகின்றன. இவற்றில் சிலவற்றை மாகாண்ண சபையூடாக வழங்குவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்நசீர் அஹமட் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் சிலவற்றை நிரந்தரமாக வழங்கவும் ஏனையவற்றை தற்காலிகமாக வழங்கவும் இணக்கம்காணப்பட்டது, குறித்த தேவைப்பாடுகள் பூர்த்தியாக்கப்படுவது கிண்ணியா மக்களுக்கு பாரிய நன்மையாக அமைந்துள்ளதுடன் இதனூடாக கிண்ணியா நகரின் சுத்த்தைப் பேண தமக்கு பாரிய உதவியாக அமைந்துள்ளதாகவும் கிண்ணியாநகர சபையின் செயலாளர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிழ் நசீர் அஹமட்,சுகாதார பிரதிமைச்சர்பைசல் காசிம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்,எஸ்தௌபீக் மாகாண சபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் லாஹிர் ஆகியோர் பங்குபற்றினர். இதேவேளை கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நேரில் விஜயம் செய்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்தலைவர் உட்பட குழுவினர் அங்குள்ள நிலைமைகளைநேரில் பார்வையிட்டதுடன் அங்குள்ளகுறைபாடுகளையும் கண்டறிந்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -