ஹம்ஸா கலீல்-
காத்தான்குடி அஷ் செய்யிது செயின் மௌலானா பள்ளிவாயல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. ஐம்பது வருட பழைமை வாய்ந்த இப்பள்ளிவாயலின் கட்டட நிர்மாணப்பணிகளுக்கு உதவி வழங்குமாறு பள்ளிவாயல் நிருவாகத்தினர் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் தலைவர் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இராஜாங்க அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளிவாயல் கட்டட நிருமாணப்பணிகளுக்கு முதற்கட்டமாக 15 இலட்சம் ரூபாய் நிதியினை 15.03.2017 புதன்கிழமை பள்ளிவாயல் நிர்வாகத்திடம் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் உறுப்பினர்களின் ஊடாக கையளித்தார்.
இதே வேளை புதிய காத்தான்குடி மனாருல் ஹுதா பள்ளிவாயல் பெண்கள் தொழுகை அறை மற்றும் அல் குர்ஆன் மதரசா புனர் நிர்மாணப்பணிகளுக்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் முஹம்மட் சப்ரி அவர்களால் மனாருல் ஹுதா பள்ளிவாயல் தலைவர் மௌலவி அஜ்வத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர், ஜமாஅத்தார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.