கிண்ணியா டெங்கு வேட்டையில் முப்படையினர் களத்தில்..!



ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பகுதியில் அதிகரித்து வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இன்று (15) கிண்ணியாவின் பல பகுதிகளில் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையிலான குழுவுடன் சேர்ந்து டெங்கு கட்டுப்பாட்டு குழுவும் கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட முப்படை அதிகாரிகளும் இதில் பங்குபற்றினர். 

கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பல பிரிவுகளிலும் பொலிஸார் கடற்படை இராணுவம் சிவில் பாதுகாப்பு அரச ஊழியர்கள் களத்தில் வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளையும் எச்சரிக்கைகளையும் விடுத்தனர் இதனுடன் சேர்ந்து திருகோணமலை மாவட்ட அரச அதிபர் புஷ்பகுமார மாவட்ட பொலிஸ் அதிகாரி உட்பட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் போன்றோர்களும் பங்கேற்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -