‘ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்’ என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஜெனீவா கூட்டத்தொடர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை தொடர்பிலும், கலப்பு அரசாங்கம் தற்போது நாட்டில் முன்னெடுக்கவுள்ள நகர்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய நாடும் ஒருபோதும் தயார் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள டிலான் பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சியின் நகர்வுகள் மிகவும் மோசமான வகையில் அமைந்துள்ளதென குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்வாறு சென்றால் வெகு விரைவில் தேசிய அரசாங்கத்தை கலைக்க வேண்டிய தேவை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.