போபத்தலா கால்நடை பண்ணை ஊழியர்கள் ஆர்பாட்டம்..!

மு.இராமச்சந்திரன்-
முகமையாளரின் நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்தும் முகாமையாளரை வெளியேற்றக்கோரியும் போபத்தலாவ மெனிக்பாலம் கால்நடை வளப்பு பன்னையின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரபத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம் கால்நடை பண்ணையிலே 20.03.2017 காலை ஆர்பாட்டம் இடம்பெற்றது.

கால்நடை வளர்ப்பு பண்ணையின் முகாமையாளர் கடும்போக்குடன் செயற்படுவதுடன் தொழிலாளர்களின் உரிமைகளையும் மறுத்துவருகின்றார் அத்தோடு சட்டத்துக்கு முறனான வகையில் இடமாற்றங்களை முன்னெடுப்பதுடன் பொலிஸாரின் உதவியுடன் அடக்குமுறையையும் மேற்கொள்ள முனைவதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்தனர் பண்ணையில் பனிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆபாட்டத்தை முன்னெடுத்த வேலையில் சம்பவயிடத்திற்கு சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் ஆர்பாட்ட காரர்களுடன் கலந்துரையாடி 21.03.2017 பாற்பண்ணையின் உயர்மட்ட அதிகாரிகளுனன் பேச்சுவாத்தை நடத்தி உரியதீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தப்பின் போராட்டம் கைவிடப்பட்டது மேலும் போராட்டம் கைவிடம்படபோதிலும் வேலை நிறுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஆரேராபாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -