பாலமுனை ஹில்ப் இங்கிலிஸ் ஹவுஸ் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் வைபவம் அண்மையில் ஹில்ப் சமூக சேவை மன்றத் தலைவர் ஆசிரியர் எம்.ஜே.எம். றிஸ்வான் தலைமையில் கைமா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஹில்ப் இங்கிலிஸ் ஹவுஸ் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக இப்புத்தகப் பைகளை சொந்த நிதியில் இருந்து வழங்கிய ஜனாப். எம்.ஏ. மன்சூர் (சதாத்) பாலமுனை SLMC மத்திய குழுவின் முன்னால் செயலாளர் அவர்களும் கௌரவ அதிதியாக பாலர் பாடசாலை பணியக வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.எல். ஹபீல் அவர்களும் ஊரின் முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் ஹில்ப் இங்கிலிஸ் ஹவுஸின் 03 பாலர் நிலையங்களில் உள்ள பாலர்களுக்கு இவ் புத்தகப்பைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.