ஏமாளிகளின் போர்வையில் பதுங்கியிருந்தது போதும். நமக்காக அறைகூவல் நமது கிழக்கில் இருந்து, புறப்படுவோம் புது யுகம் புனைவோம். நம்மை மழுங்கடிக்க "பிரதேசவாதம்" எனும் கேடையத்தை கையில் எடுக்கத்துணியும் துரோகிகளிடம் முழங்கிடுவோம்" கிழக்குத் தலைமைத்துவம் " எமது சுவாசம் என்று. கிழக்குத் தலைமையே எமது தேடல் என்று. மாமனிதன் அஷ்ரப் எமது தலைமைத்தாகம் தணிக்கவே கிழக்கில் இருந்து தலையெடுத்தார். இழந்து தவித்த ஈரெட்டாண்டுகள் போதும் புறப்படுவோம்.
நமதினத்தின் விடியலுக்காய் ,அஷ்ரப் போராளிகளைத் திரட்டும் பணியில் மூத்த போராளித்தலைவன் அதாவுல்லாஹ். பகைவர்கள் எதற்கும் நாலடி தள்ளியே நின்று கொள்ளட்டும். அஷ்ரப் விலக்கிவைத்தவர்கள் அவர்களது பரம்பரைகள் ஓடி ஒழியட்டும். நாகரீகம் தெரியா மமதையில் உளரித்திரியும் நான் என்ற மமதைபிடித்த பட்டமரங்கள் மரத்துப்போகட்டும். மரம் எனும் போர்வையை மாலையாகச் சூடி மக்களை ஏமாற்றித் திரியும் தலைவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும். தலைவனின் மீள் வருகைக்கு மாலையிட்டு செங்கம்பளம் விரித்து பூத்தூவி வரவேற்றிடுவோம்.
எமது இனத்தின் இருப்பைக் கோர, தீர்வுத்திட்டத்தில் இடத்தைக் கோர , கலந்துரையாட அழைப்பு வந்திருக்கின்றது உலமாக்களுக்கும், மூத்த போராளிகளுக்கும், இளைஞர்களுக்கும் , விடியலைத் தேடி நிற்கின்ற சமூகத்தினருக்கும். அழைப்புக்கு அங்கீகாரம் வழங்குவோம். மாமனிதன் அஷ்ரப் மரம் நெறி தவறிக்கிடக்கும் இத்தருணம் வழி தொடர அழைக்கும் மூத்த தொண்டனைப் போற்றுவோம். கருவறை நோக்கி மீள்வோம்..!