அமைச்சர்களின் வருகையால் தீர்வு கிட்டுமா..? டெங்கு நோயாளர்களின் கண்ணீர் கலந்த கோரிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா தளவைத்தியசாலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெங்கு தீவிரமடைந்து பல நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையையும் யாவரும் அறிந்தோம் இன்று (29) கிண்ணியா தளவைத்தியசாலைக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் றவுப் ஹக்கீம் தலைமையிலான குழு விஜயம் செய்தது இதில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர், சுகாதார பிரதியமைச்சர் பைசல் ஹாசிம் உட்பட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாகாண சபை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கிண்ணியா தளவைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வாட் தொகுதியில் உள்ள நோயாளர்களுடன் சுகநலம் விசாரித்ததுடன் குறைகளையும் கேட்டறிந்தனர். 

இங்கு நோயாளர்கள் கூறுகையில் டெங்கு நோய் தாக்கம் தீவிரமடைவதனால் வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை மலசலகூடம் போதாமை மின்விசிறிகள் உட்பட வைத்திய சேவைகள் குறைபாடுகள் காணப்டடுவதுடன் ஐந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினால் மீண்டும் பத்து நோயாளர்கள் டெங்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள் இதனை முன்கூட்டியே அரச பொறுப்புவாய்ந்தவர்கள் அரசியல் வாதிகள் கூடிய கவனம் செலுத்தியிருந்தால் டெங்கு தீவிரமடைவதை கட்டுப்படுத்தியிருக்கலாம் மரணங்களைக் கூட குறைத்திருக்கலாம் வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறைகளே காரணம் என டெங்கு நோயாளர்கள் விரிவாக தெரிவித்தனர்.பட்சிலம் குழந்தைகள் கட்டில்கள் இன்மை காரணமாக ஒருகட்டிலில் மூன்று க்கு மேற்பட்டோர்கள் நடையோரப்பாதையில் கீழே படுத்துக்கிடக்கும் நோயாளர்கள் இதனைக் கண்டு கொண்ட சுகாதார அமைச்சர்கள் குழு மாகாணம் தொடக்கம் மத்திய அரசு அமைச்சு வரை கவனத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிண்ணியா தளவைத்தியசாலை டெங்கு நோயாளர்களின் கண்ணீர் கலந்த கோரிக்கை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -