இந்த நாட்டில் வாழ்வதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம் - கோவிந்தன் கருணாகரம்

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ஹிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடி தோற்கடிக்கப்பட்ட நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக அல்லாமல் வாழ்வதற்காக இராஜதந்திர ரீதியில் போராடிக் கொண்டிருக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் செவ்வாய்க்கிழமை (14.03.2017) இடம்பெற்ற மகளிர்தின விழாவின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய போது;

தோற்கடிக்கப்பட்ட தமிழ் சமூகம் தற்போது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜ தந்திரங்கள் ஊடாக இழந்தவற்றைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். தற்போது ஜெனீவாவிலே மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே கடந்த 2009 மே 18 ஆம் திகதி போர் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் அன்றிலிருந்து இன்று வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடிக் கொண்டு வருகின்றது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிலே பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் கொடுத்திருந்தது. இலங்கையில் நடைபெற்ற இறுத்திக் கட்ட போரிற்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டும் என்பது மாத்திரமல்லாமல் வடக்கு கிழக்கில் ஆயுதப் படைகளினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும், இவற்றை விட கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் போன்று எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதற்குரிய பொறிமுறைகள்; கண்டறியப்பட வேண்டும்.

தாங்கள் தேர்தலிலே வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்காது' என்றாரவர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -