அந்-நூர் மகா வித்தியாலயத்தை நீக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளரே கடிதம் அனுப்பினார்: கல்வி அமைச்சர்

எம்.ஜே.எம்.சஜீத்-
ருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தில் A தொகுதி பாடசாலையாக தெரிவு செய்யப்பட்ட அந்-நூர் மகா வித்தியாலயத்திற்கு வேறு செயற்திட்டத்திற்கு நிதி கிடைத்துள்ளமையால் அப்பாடசாலை அத்திட்டத்தில் A தொகுதியிலிருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக அரபா வித்தியாலயத்தை உள்ளடக்கித்தருமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டார் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 75ஆவது சபை அமர்வு இன்று (21) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்திட்டத்தில் அட்டாளைச்சேனை அந்-நூர் மாகா வித்தியாலயம் இணைக்கப்பட்டுள்ளதா? என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பையினால் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டதற்கினங்க மேற்குறித்த விடயம் மாகாணப் பணிப்பாளரினால் சிபாரிசு செய்யப்பட்டு மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதனால் அந்-நூர் மகா வித்தியாலய அபிவிருத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் நிரல் கல்வி அமைச்சிலிருந்து அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து மேற்குறித்த திட்டத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் A தொகுதியில் தொடர்ந்தும் இருப்பதற்கு கோரிக்கையைப் பெற்று மாகாண கல்விப் பணிப்பாளர் மூலமாக நிரல் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்து இப்பாடசாலை தொடர்ந்தும் இத்திட்டத்தில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்-நூர் மகா வித்தியாலயத்தில் ஏற்கனவே இத்திட்டத்தினூடாக அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -