தனியான சிகரெட் விற்பனைக்கு இனி ஆப்பு - அமைச்சர் ராஜித்த

தனியான சிகரெட்டை விற்பனை செய்வதை தடுக்கும் சட்டதிட்டங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் நாளை (20) கைச்சாத்திடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

புகைத்தலை கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் காரணமாக நாட்டில் 47 சதவீதம் புகைத்தல் பாவனை குறைந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 

மல்வானை பிரதேசத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புகைத்தல் காரணமாக நோய் வாய்ப்புக்குட்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -