அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி




எம்.ஜே.எம்.சஜீத்-

க்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் ஷம்சியா இல்லம் அதிக புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினை தனதாக்கிக் கொண்டது.

ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்று (4) கோலாகலமாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.ஏ ஜசாகீர் (நழீமி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் காசீம் கௌரவ அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ் ஏ.எம். றகுமத்துல்லா, கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சீ கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம். ஜெமீல் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் ஜெமீல் காரியப்பர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் ஷம்சியா (பச்சை), கமரியா (மஞ்சள்) ஆகிய இரண்டு இல்லங்கள் பங்குபற்றின. இதில் ஷம்சியா இல்லம் அதிக புள்ளியாக 481 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், கமரியா இல்லம் 477 புள்ளிகளைப் பெற்று இரண்டமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதன்போது வெற்றியீட்டிய இல்லங்களுக்கும், வீரர்களுக்கும் அதிதிகளினால் ஞாபச்சின்னங்கள், பரிசுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் என பெருந்திரலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -