பாராளுமன்றத்தின் கௌரவத்தை உறுப்பினர்களே பாதுகாக்க வேண்டும் - பிரதீபன்

மு.இராமச்சந்திரன்-
பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் புனித்தன்மையை பாதுகாக்கவேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் பொருப்பு என ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார் 

19.03.2017 அட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த தேர்லில் தோல்வியடைந்தவர்கள் மக்களிடத்தில் இனவாதத்தை தூன்டி ஆர்பாட்டங்களையும் பேரணிளையும் நடத்தி ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றனர்.

தற்போது மக்களின் அங்கிகாரத்துடன் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசானது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையின் கீழ் பிரதேச மத மொழி வேறுபாடின்றி அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றது. அதே போல அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நல்ல அபிவிருத்தி திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்பித்து அங்கிகாரம் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு பாராளுன்றத்தில் காணப்படுகின்றது இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் சந்தையில் வியாபாரிகளின் கூச்சிலிடுவது போல நடந்துகொள்கின்றனர் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி 2020 ம் ஆண்டுவரை தொடரும் அத்தோடு தலைநகரிலும் வீதிகளிலும் போராட்டங்களை நடத்துவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்டைகின்றது ஆகவே ஆர்பாட்டங்களை நடத்துபவரேகளுக்கான தனியான இடம் ஒத்துக்கி அங்கே ஆர்பாட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -