பட்டங்களுக்கு இனியும் இறக்கமில்லை - மேலதீக பிரதேச செயலாளர் அல்-அமீன்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ட்டதாரிகளின் கவலையான நிலைகள் மனதை ரணப்படுத்திய நிலையில் அவர்களுக்காக தற்போதைய நிலையில் கவலையுடன் கையுயர்த்தியவனாக, பாடசாலை மாணவர்களே!நன்கு கவனியுங்கள். படிப்பினை பெறுங்கள்.
இனிமேலேனும்...

1) பல்கலைக்கழகத்திற்குச் செல்லவென தொழிற்தகைமை பெறத்தக்கதான துறைகளைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

2) உயர்தரத்தில் கலைப்பிரிவில் சித்திபெற்றவர்களாக இருப்பினும் கூட, பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது தொழில்வாய்ப்பு அதிகமாக உள்ள கற்கைநெறிகளுக்கு விருப்பத்தேர்வு முன்னுரிமையளித்து விண்ணப்பியுங்கள். (உ+ம்) Information and communication Technology, Hospitality Management.

3) பல்கலைக்கழகம் செல்ல முன்பே உங்களுடைய ஆங்கில அறிவை சீராக்கிக் கொள்ளுங்கள். முடிந்தால் இரண்டாம் மொழியிலும் தேர்ச்சிபெற முயலுங்கள். அத்தோடு கணணியின் ஆரம்ப அறிவைப் பூர்த்தி செய்துவிடுங்கள். இவைதான் பல்கலையில் உங்கள் தேடலை மேம்படுத்தி விரிபார்வைமிக்க பட்டதாரியாய் வெளியாகிட உதவும்.

4) கலைத்துறை மாணவராக இருப்பினும், ஆங்கிலத்தை ஓர் பாடமாகத் தெரிவு செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு ஒவ்வாமையாக இருப்பினும் ஒரு செமஸ்ரர் முடியும் தருவாயில் உங்கள் மனோதிடத்தை மேம்படுத்தி முயற்சியாளனாக மாற்றும். இறுதியில் ஆங்கிலப்புலமை உங்கள் வாழ்வையே மாற்றும்.

5) பல்கலையில் இருக்கும் காலங்களில் உங்கள் பொது அறிவு(General Knowledge), பொதுவிடய அறிவு(General Subject Knowledge), நுண்ணறிவு (IQ) மட்டங்களை மேம்படுத்த நன்கு இணையத்தளங்களில் இலங்கையின் மற்றும் உலகின் அரசியல், பொருளாதார, சமுக, புவியியல், வரலாறு,தொநுட்ப,விஞ்ஞான, சுகாதார, சமகால விவகாரங்கள் போன்றவற்றை அந்த மூன்று/நான்கு வருடங்களும் தேடி வாசித்துக்கொண்டே இருங்கள். அது உங்கள் துறைசார்பானதாக இல்லாதிருக்கலாம். ஆனாலும் அதுதான் உங்கள் அறிவை விசாலப்படுத்துவதுடன் பிற்கால தொழிற்போட்டிப் பரீட்சைகளை இலகுவாகக் கடந்து செல்லவும் அதியுயர் பதவிகளை எட்டிடவும் உதவும்.

6) முடிந்த அளவு நூலகத்தையும் கணணிக்கூடத்தையும் பயன்படுத்துங்கள். வாசியுங்கள். பயிற்சியெடுங்கள்.

7) பல்கலைக்கழகம் சென்ற பின்னர் நீங்கள் எத்துறையில் படித்தாலும் அத்துறையில் சிரமமெடுத்து முதல் வகுப்பு/இரண்டாம் வகுப்பு மேனிலை பெறவென சிரத்தை எடுங்கள். இக்காலகட்டத்திற்குள்ளேயே மேலதிக குறுங்கால டிப்ளாமாக்களை செய்து கொள்ளுங்கள்.

8) உங்கள் துறைசார் பாட விரிவுரைகளிற்கு மேலதிகமாகத் தேடுங்கள். உங்களுக்கு கிடைக்கும் Presentation, Group works போன்ற எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்துங்கள். Presentationஐ உங்கள் பேச்சாற்றலை வளப்படுத்தவும் சபைக்கூச்சங் களையவும் பயன்படுத்துங்கள். Group works உங்கள் தலைமைத்துவ ஆற்றலை அதிகரித்து குழுப் பங்குபற்றுகை மனப்பாங்கை மேம்படுத்தும்.

9) பல்கலையில் கல்வி பயிலும்போதே தலைமைத்துவ சவால்களை முன் சென்று தாமாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். கழகத்திற்குள்ளேயும் தத்தம்சொந்த பிரதேசங்களிலும் சமுகநல செயற்றிட்டங்களில் ஈடுபடுங்கள். அரசியலில் ஆர்வமிருந்தால் கல்விக்கு தடையேற்பட்டுவிடாதபடி, தூய அரசியல் மாற்றத்திற்காக ஓரளவு ஈடுபடுங்கள். ஆனால் உள்ளாகிவிட வேண்டாம்.

10) நீங்கள் எந்தளவு கழகக் காலத்தை வேடிக்கை விநோதங்களில் கழிப்பதிலிருந்து குறைத்துக் கொள்கின்றீர்களோ, எந்தளவு பருவக்கோளாறுகளை அளவோடு கட்டுப்படுத்துவீர்களோ, அந்தளவு உங்கள் பாதை தடம்புரளாது செல்ல வழிசெய்வீர்கள். இதற்கென உங்கள் கனவினை/ இலட்சிய வேட்கையினை தணிய விடாமல் எரியச் செய்யுங்கள். பெற்றோரை, சமூகத்தை, குடும்பத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

10) உங்கள் துறைசார்பில் நீங்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும்போது 100% ஈடுபாடு, தேடல், உண்மை முடிவுகளுடன் சமர்ப்பியுங்கள். தலைப்பை மிகப் பிரயோசனமான துறைகளில் தேர்வு செய்யுங்கள்.

மேற்படி விடயங்களில் அர்ப்பணிப்புடன் சிரத்தையெடுத்த பட்டதாரிகளாக நீங்கள் வெளியேறினால்...

1) உங்கள் பட்டம் அரசியலிடம் பிச்சை கேட்காது.
2) குறைந்த பட்ச தொழிலிலேனும் குந்திவிட வேண்டிய நிலைவராது.
3) பட்டதாரி என்றால் நெஞ்சை நிமிர்த்தி- படை கூட்டும் தலைவன், சமூக மாற்றத்திற்கு தலைமை தாங்கும் தளபதி எனக் காண்பீர்.
4) பட்டத்தோடுதான் உங்கள் நிஜப் பயணமே ஆரம்பித்துள்ளதை உணர்வீர்கள். 
5) அரச/ தனியார்துறைகளின், அரசியலின், வணிகத்தின், சுய முயற்சியாண்மைகளின் ( Entrepreneur) தளபதிகள் நீங்கள்தான்...
6) போட்டிப் பரீட்சைகள் உங்களுக்கு போட்டியாகவே இருக்காது.
இன்னமல்_அஃமாலு_பின்னிய்யா (இஸ்லாம்)

If_you fail to plan, you plan to fail (Western)

ஹிம்மதுர் ரிஜால் தஹ்தீமுல் ஜிபால் - முயன்றால் மலையையும் தகர்க்கலாம்.
S.M.AL AMEEN(SLAS)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -