கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமதின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்ரம சிங்க வழங்கிய வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுடனான குழுவினர் இன்று நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் பிரதமரின் ஆலோசகர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடங்களை நிறப்புவதற்கு அனுமதியினைக் கோரியிருந்தனர்.
அதனடிப்படையில் ஒருவாரத்தினுள் அவசரமாக சகல வெற்றிடங்களையும் முறைப்படி அனுப்பிவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் பட்டதாரிகள் மற்றும் ஏனையோருக்கான நியமனங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
அத்துடன் கிழக்குமாகாண பாடசாலைகளில் நிலவும் 67 ஆய்வுகூட உதவியாளர்கள், 284
காவலாளிகள், 261 சிற்றூழியர்கள், 384 சுகாதார ஊழியர்கள் ஆகிய
வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான அனுமதியும் கிடைத்துள்ளதாக முதலமைச்சின் ஊடகப்பிரினர் தெரிவித்துள்ளனர்.