கரையோர மாவட்டம் : சில சந்தேகங்களுக்கு தீர்வு தேடியபோது

ரையோர மாவட்டம் சம்பந்தமாக பேசப்படும் காலமாக இது இருப்பதனால், அந்த கோரிக்கை முஸ்லிம்களுக்கு தற்போதைய நிலையில் சாதகமா, பாதகமா என்று யோசித்து, சில சந்தேகங்களுக்கு தீர்வு தேடியபோது....

இலங்கையில் சுந்திரம் கிடைத்த நாளிலிருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயத்தில், பனிப்போரில் ஆரம்பித்து ஆயுதபோராக மாறி இன்று வெளிநாட்டின் உதவியுடன் பேச்சு வார்த்தை போராக சென்று கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் முஸ்லிம்கள், இரு இனத்தையும் பகைத்துக் கொள்ளாமல் சிங்கள ஆட்சியாளர்களுடன் இனங்கிய அரசியலை செய்துவந்தார்கள்.

இனங்கிய அரசியல் செய்துகொண்டிருந்த போதும் கூட, முஸ்லிம்களுக்கு சிங்கள ஆட்சியாளர்கள் தீமைகளையும் செய்தார்கள், அதே நேரம் சில நண்மைகளையும் செய்தார்கள் என்பது உண்மையென்றாலும், அன்று சிங்கள மக்கள் தமிழர்களை சந்தேககண் கொண்டு பார்ப்பதைப்போல் முஸ்லிம்சமூகத்தை அப்படிநோக்கவில்லை என்பதையும் கடந்தகாலங்களில் அவர்களின் செயல்பாட்டை கொண்டு நாம் புரிந்துகொள்ளலாம்.

அதற்கு உதாரணமாக பல முஸ்லிம் பாராளுமன்ற உருப்பினர்களை சிங்கள மக்கள் அன்று தெறிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிய விடயங்களும் நடந்திருந்தன. பிறகு நடந்த சில கசப்பான நிகழ்வுகளின் காரணமாக முஸ்லிம்களும் தனிக்கட்சி ஆரம்பித்து தனிப்பாதை அமைத்து செல்ல முற்பட்டபோதுதான், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று அரசியல் ரீதியாக பிரிவிணை ஏற்பட்டு அந்தந்த இனம் அந்தந்த இனத்துக்கே வாக்களிக்க வேண்டும் என்று பிரிந்து நின்று வாக்களிக்க பழகிக்கொண்டார்கள் என்பதே உண்மையாகும்.

இப்போது விடயத்துக்கு வருவோம்...

1978ம் ஆண்டு மொரகொட ஆணைக்குழு கல்முனை கரையோர மாவட்டத்தை பரிந்துரை செய்திருந்தது, அதனை அன்றய அம்பாரை பாராளுமன்ற உருப்பினராக இருந்த பி.தயாரத்தன கடுமையாக எதிர்த்து வந்தார். அந்த எதிர்ப்பை முறியடிப்பதற்கு, இனங்கிய அரசியல் மூலம் அன்றய முஸ்லிம் உருப்பினர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கும் போதுதான், முஸ்லிம்கள் பேரினவாத அரசியலை விட்டு இனரீதியான அரசியலை முன்னெடுக்க முற்பட்டார்கள், அதனை ஒரு காரணமாக காட்டி இன்னும் ஒருபடி மேலே சென்று கரையோரமாவட்ட விடயத்துக்கு கடும் எதிர்ப்பு தெறிவிக்கத் துவங்கினார்கள் அம்பாரை சிங்கள அரசியல் வாதிகள், அந்த எதிர்ப்பு இன்றுவரையும் தொடர்வதை நாம் காணலாம்.

அன்று கரையோர மாவட்டம் கிடைத்திருந்தால் இனங்கிய அரசியலின் மூலம் இதனோடு ஒட்டிய சில காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றிருக்கலாம், ஆனால் இப்போது நிலைமை அப்படியல்ல; அப்படித்தான் நாம் கரையோர மாவட்டத்தை பெற்றாலும் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சின்ன சின்ன விடயங்களுக்கும் பிரச்சினை படவேண்டிவரலாம், காரணம் கரையோர மாவட்டம் என்றுகூறிக்கொண்டு எல்லைகளை நாம் பிரிக்கும் போது தேவையில்லாத பிரச்சினைகள் உறுவாவதற்கு அது ஏதுவாக அமையும்.

சிங்கள பகுதியான லகுகல , தீகவாபி போன்ற இடங்களை அவர்கள் எல்லையிட முற்பட்டால் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் அது ஆபத்தாக வந்துமுடியலாம், ஏனென்றால் முஸ்லிம்களின் காணிகள் அந்த எல்லைக்குள் இருப்பதனாலாகும். அதேநேரம் கரும்புச் செய்கை என்ற ரீதியில் முஸ்லிம்களின் காணிகள் சிங்கள பகுதிகளுக்குள் மாட்டிக்கொண்டுள்ளது, அதுமட்டுமல்ல சம்மாந்துறை கல்முனை பொத்துவில் மக்களின் விவசாய தேவைக்கு நீரையும் அம்பாரை தொகுதியினூடாகவே பெறவேண்டியுமுள்ளது.

பிரிந்ததன் பிற்பாடு "பிடியாத பொண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் "என்பது போல் கரையோர மாவட்ட மக்களுக்கு புதுப்புதுப் பிரச்சினைகள் தோன்றலாம்.
ஏன் அதனை கூறுகின்றேன் என்று சொன்னால்,

நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டப்பட்ட 500 வீடுகளையே கொடுக்கவிடாதவர்கள் எதிர்காலத்தில் எம்மோடு இனங்கி போவார்களா? என்ற கேள்வியும் கேட்கப்படவேண்டியுள்ளது. அந்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க வக்கில்லாத இந்த அரசியல் வாதிகள் அந்த நேரம் வரும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முன்வருவார்களா? என்பதையும் நாம் சிந்திக்கவேண்டும். அதே நேரம் கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தையே தடுத்து நிறுத்தமுடியாத நமது அரசியல் வாதிகள் இனிவரும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்களா? என்றும் யோசிக்கவேண்டியுள்ளது.

மறைந்த தலைவர் அவர்கள் அன்று பொன்னன்வெளி காணியை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கமுற்பட்டபோது எவ்வளவு பிரச்சினைகளை இனரீதியாக அவர் சந்தித்தார் என்பதெல்லாம் வரலாறு. அஸ்ரப் அம்பாரையை பிடிக்கவந்துள்ளார் என்று சிங்கள இனவாதிகள் போட்ட கூச்சல், அஸ்ரப் அவர்களும் புத்தபிக்கு ஒருவரும் ரீவியில் விவாதிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது என்பதையும் நாம் அறிவோம்.

அவர்களின் இந்த இனவாத குற்றச்சாட்டை இல்லாமல் செய்வதற்க்குத்தான் அன்று அஸ்ரப் அவர்கள் 200 கோடி செலவு செய்து தீகவாபியை அபிவிருத்தி செய்து கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற விடயங்களை, விடயம் தெறிந்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதனை அஸ்ரப் அவர்கள் சந்திரிக்காவுக்கு எழுதிய 52பக்க கடிதத்தில், எந்த சிங்கள தலைவர்களும் செய்யாத சேவையை நான் செய்தேன் மேடம் என்று தீகபாவி அபிவிருத்தியை பற்றி குறிப்பிட்டு, நான் சிங்கள மக்களின் எதிரியல்ல மேடம் என்று கூறுமளவுக்கு நிலைமை சென்றதையும் யாரும் மறுக்கமுடியாது.

இப்படியான பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த அம்பாரை மாவட்டம், கரையோர மாவட்டம் பிரிந்ததன் பிற்பாடு என்ன பாடு படப்போகின்றதோ என்பதே எனது கவலையாகும். இன்னும் ஐம்பது வருடங்களின் பின் நமது சமூகம் இடப்பிரச்சினையால் அவதிப்படபோகின்றார்கள் அந்த நேரம் இந்த இனவாதம் இன்னும் இறுக்கிபிடிக்க மாட்டது என்று என்ன உத்தரவாதம் உள்ளது, என்பதை அரசியல் வாதிகள் அலசிப்பார்த்து நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

தீகபாவி, லகுகல எல்லைகளுக்குள் உள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையே போதும் ஆண்டாண்டு காலமாக நாம் நிம்மதியற்று வாழ்வதற்கு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு தீர்வுதான் என்னவென்று என்னிடம் கேட்டால், இந்த காலகட்டத்தில் பிரிப்பது என்பது தீர்வு அல்ல என்பதே எனது கருத்தாகும். வேண்டுமென்றால் "கரையோர தேர்தல் மாவட்டத்தை" கேட்டுப்பெறலாம். அதே நேரம் அம்பாரை தொகுதியைவிட்டு எங்கோ இருக்கும் தெகியத்தைகண்டியை நீக்கிகேட்டுவிட்டு, அம்பாரை தொகுதியில் உள்ள அரசகாணிகளில் குடியேற்றங்கள் நடக்கும் போது எங்களுக்கும் விகிதாசாரபடி இடம்தாருங்கள் என்று உரிமையோடு கேட்டுப்பெற நாம் சிந்திக்கவேண்டும்.

கரையோர மாவட்டத்தை பிரித்தால் நாம் அதனை கேட்கமுடியாது ஏனென்றால் கூடுதலான நிலப்பரப்பு அந்த பகுதிகளில்தான் உள்ளது என்பதனாலாகும். எதிர்காலத்தில் நமது மக்களின் இடப்பிரச்சினையை, பிரிந்த கரையோர மாவட்டத்தில் பெறமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே தமிழில் நிர்வாகம் வேண்டும் என்பதற்காக பெரிய பிரச்சினைகளை உண்டாக்கி விடாதீர்கள் என்பதே எங்கள் கருத்தாக உள்ளது.

இதற்குல் தமிழ்மக்களின் காணிப்பிரச்சினைகளும் உள்ளன இதனை கருத்தில் கொண்டுதான் அவர்கள் இதற்குல் மூக்கை நுழைக்காமல் பேசாமல் இருக்கின்றார்களோ என்றும் என்னத்தோன்றுகிறது. இந்த விடயம் கரையோர மாவட்டம் சம்பந்தமாக மட்டுமே நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அதனால் வடகிழக்கு இணைப்பு பிரிப்பு விடயத்தில் நண்மை என்ன தீமை என்ன என்பதை பிறகு எழுதுவோம்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -