மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா 8ஆம்,9ஆம் திகதிகளில் நடைபெற்று இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பும் வெள்ளிக்கிழைமை(10-03-2017)அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடை பெற்றது.
இதில் பிரதம அதிதியாக திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.சிறப்பு அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எல்.எஸ்.அப்துல்,மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.அப்துல் மனாப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளாக,கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், அம்பாறை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் சட்டத்தரணி எம்.சி.எம்.நவாஸ்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் உள்ளீட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
கமர்,சம்ஸ்,நஜ்ம் அகிய இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் ஷம்ஸ் இல்லம் 274 புள்ளிகளையும்,கமர் இல்லம் 216 புள்ளிகளையும்,நஜ்ம் இல்லம் 215 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.ஆண்கள் பிரிவில் கமர் இல்லம் 332 புள்ளிகளையும்.ஷம்ஸ் இல்லம் 240 புள்ளிகளையும்,நஜ்ம் இல்லம் 227 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
இறுதி முடிவின் படி கமர் இல்லம் 548 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கேடையத்தை தனதாக்கிக் கொண்டது. சம்ஸ் இல்லம் 514 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தையும்,நஜ்ம் இல்லம் 442 புள்ளிகளைப்பெற்று 3ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
விஷேட நிகழ்வாக கடேட் சோ,தேகப்பியாசம்,அணி நடை என்பன இடம் பெற்றதுடன் கழகங்களுக்கிடையிலான அஞ்சலோட்டப் போட்டியும் இடம் பெற்று மருதமுனை கோல்ட் மைன்ட் ஜம்பியனாகியது. நீண்ட கால இடைவெளிக்குப் பின் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பெருந்தொகையான பார்வையாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.