மட்டக்களப்பு:காலையிலேயே மன வேதனை - சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம்

ட்டக்களப்பு நாவற்குடா மாதர் பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை தொடர்பாக குறித்த சிறுவனின் வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொலை தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்து.

மேலும்;

கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்து வேறாக வாழ்ந்துவரும் நிலையில் குறித்த சிறுவன் தாயின் தங்கையின் பரமாரிப்பிலே வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையிலேயே சிறுவன் வளர்புத்தாயான சித்தியால் தாக்ப்பட்ட நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு வரும் வழியிலே உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

தற்ப்பொழுது சிறுவனின் உடல் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -