”தணிக்கை தகா்க்கும் தனிக்கை” எனும் பெயரில் தமிழ் மிரா் ஆசிரியா் ஏ.பி.மதன் எழுதிய ஆசிரியத் தலையங்கம் அடங்கிய நுால் வெளியீட்டு விழா 17.03.2017 ஆம் திகதி பி.ப.02.00 மணிக்கு கொழும்பு டி.ஆர் விஜயவா்த்தன மாவத்தையில் உள்ள தபாலக கேட்போா் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவும் சிறப்பு அதிதியாக எதிா்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவர்களும் கலந்து கொள்கின்றனா். கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், மனோ கனேசன், கயந்த கருநாதிலக்க, ஆகியோறும் கலந்து கொள்கின்றனா்.
இந் நுால் வெளியீட்டு வைபவத்திற்கு - கலைக்கதிா் ஆசிரியா் எஸ்.வித்தியாகரன், தலைமைவகிக்க. இனைத் தலைமை இந்தியாவிலிருந்து வருகை தரும் பஹ்வனா் சிங் வகிக்கிறார், நுால் ஆய்வினை சட்டத்தரனி கே.அசோக்பரன், வரவேற்புரையை தமிழ் எப் எம் பொறுப்பாளா் பரணிதரன் முருகேசு, ஆகியோறும் நிகழ்த்துவாா்கள். நுாலின் முதற்பிரதியை எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் முகாமைத்துவ பணிப்பாளா் குமாா் நடேசன் பெற்றுக் கொள்ள ஏற்புரையை நுாலசிரியரும் தமிழ் மிரா் ஆசிரியருமான ஏ.பிமதன் நிகழ்த்துவாா்.