சட்டம். ஒழுங்கு தொடர்பில் கலந்துறையாடல்..!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை மாவட்டத்தில் நீதி நிர்வாகத்திற்குற்பட்ட சகல பொலிஸ் உயரதிகாரிகளுக்கும். நீதவான்களுக்குமான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண மேல் நீதிபதி அண்ணலிங்கம் பிரேம் சங்கர் தலைமையில் திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது.

சட்டம். ஒழுங்கு தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்கு தொடருனராக செயற்படும் பொலிஸாரின் செயற்பாடுகள். குறைபாடுகள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றியும் காலம் தாழ்த்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குதல் போன்ற விடயங்கள் இக்கலந்துறையாடலில் ஆராயப்பட்டது.

குறிப்பாக பிடி விறாந்து விதிக்கப்ட்டவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது பொலிஸாரின் அசமந்தப்போக்குகள் பற்றியும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் ஆலோசனையும் வழங்கப்பட்து.

குறைபாடுகள் தவறுகளை நிவர்த்தி செய்து சட்டம். ஒழுங்கை நிலைநாட்டி உரிய நேரத்தில் காலம் தாழ்த்தாமல் நீதியை பெற்றுக்கொடுப்பதே இக்கலந்துறையாடலின் முக்கிய நோக்கமாகும் என திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேம் சங்கர். மாவட்ட நீதிமன்ற நீதவான் என்.எம்.எம்.அப்துல்லாஹ். திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா. மற்றும் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க.மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.என்.றிஸ்வான் மற்றும் சட்டத்தரணிகள். திருகோணமலை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் .பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -