மு.இராமச்சந்திரன்-
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்
மஸ்கெலியா ஆதார வைத்தியசாலைக்கு 06.03.2017 விஜயமொன்றை மேற்கொண்டாபோதே இவ்வாறு தெரிவித்தார்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசா அபிவிருத்தி குழுவிருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வைத்தியசாலையின் நிலவும் அடிப்படை பிரச்சினைகளான தளபாடங்கள் மற்றும் தாதியர் பற்றாக்குறை சம்பந்தமாகவும் வைத்தியசாலையின் பொருப்பதிகாரியுடன் மாகாணசபை உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
குறைபாடுகளை கேட்டுக்கொண்டதுடன் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதன் போது அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வெள்ளையன் தினேஷ் மற்றும் மஸ்கெலியா நகர வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.