வஸீம் தாஜுதீன் படு கொலை கொலை­யா­ளி­களை அவ­ச­ர­மாக கைது செய்யவும் - மன்றாடிய அனுர

வஸீம் தாஜுதீன் படு கொலை தொடர்பில் கொலை­யா­ளி­களை அவ­ச­ர­மாக கைது செய்­யு­மாறும், கொலை­யுடன் தொடர்பு அற்ற தன்னை பிணையில் விடு­விக்­கு­மாறும் முன்னாள் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க நேற்று பிர­தி­வாதிக் கூண்டில் இருந்­த­வாறு நீதி­வா­னிடம் மன்­றா­டினார். 

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் இக்­கொலை விசா­ர­ணை­களைப் பொறுப்­பேற்று இரு வரு­டங்­களும் ஒரு மாதமும் கடந்­துள்ள நிலையில் தன்னை இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­த­தாகக் கூறி கைது செய்து ஒரு வரு­டமும் 3 மாதங்­களுமாகின்­றன. என் மீதான குற்றச்சாட்­டு­­க­ளுக்கேனும் இது­வரை சாட்­சி­களை அவர்கள் மன்றில் சமர்­பிக்க வில்லை.

இது­வரை சமர்­ப்பிக்­கப்பட்ட அத்­தனை பீ அறிக்­கை­களின் பிர­கா­ரமும் என்னை தொடர்ந்து விளக்­க­ம­ரி­யலில் வைப்­ப­தற்­கான எந்த ஆதா­ரமும் இல்லை என்­பதை நான் அறி­வேன்.கொலைச் சதி தொடர்பில் சந்­தேகம் சந்­தேகம் எனக் கூறியே என்னை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்எ னக்கு பிணை அளிக்க இந்த நீதி­மன்­றுக்கு அதி­காரம் உள்­ளது.

நான் கொலை செய்­ய­வில்லை. எனவேதான் வஸீமின் கொலை­யா­ளி­களை உடன் கைது செய்­யுங்கள் என இந்த மன்றைக் கோரு­கின்றேன். வஸீமைக் கொலை செய்­த­வர்­களைக் கைது செய்­யுங்கள் என வலி­யு­றுத்தி அனுர சேன­நா­யக்க நீதி­வா­னிடம் மன்­றா­டினார்.

நேற்­றைய வஸீம் தாஜுதீன் கொலை வழக்கின் போதே அவர் இவ்வாறு மன்றாடினார். எனினும் நேற்றும் பிணை வழங்காத நீதிவான் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -