கிண்ணியா காய்ச்சல்: சிகிச்சை பலனின்றி மூன்று பிள்ளைகளின் தாய் ஜெஸீமா மரணம்

அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிகக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று (20) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா.றியாத் நகர் பகுதியைச்சேர்ந்த ஜவ்பர் ஜெஸீமா (38வயது) எனவும் தெரியவருகின்றது.

கற்பிணியாக குறித்த பெண்ணின் சிசுவை மீட்கும் நோக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியதாகவும் சிசு உயிரிழந்துள்ளதாகவும் தாயார் இன்று உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் டெங்கினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதும் நோய்கள் காணப்பட்டதா என்ற விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சட்ட வைத்திய பரிசோதனை நடைபெற வுள்ளதாகவும் அப்பரிசோதனை நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -