தமிழ்மக்களுக்குரிய ஒரேயொரு தேசியபலம் த.தே.கூட்டமைப்பே-கோடீஸ்வரன் எம்.பி.









காரைதீவு நிருபர் சகா-

மிழ்மக்களுக்குரிய ஒரேயொரு தேசியபலம் த.தே.கூட்டமைப்பே. தமிழனின் சக்தியும் அதுதான். ஆனால் அதை சீர்குலைக்க உள்ளுரிலும் சர்வதேசத்திலும் சதி நடக்கின்றன. அதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கல்முனையில் நடைபெற்ற நூல்வெளியீட்டுவிழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.

கல்முனையின் மூத்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் முகில்வண்ணன் எழுதிய 'நீறுபூத்த நெருப்பு நாளும்கோளும் நம்பினோர் கெடுவதில்லை' ஆகிய 03 நூல்களின் வெளியீட்டுவிழா நேற்று கல்முனை உவெஸ்லிக்கல்லூரியில் நடைபெற்றது.

வகோடீஸ்வரன் எம்.பி.ளியீட்டுரையையும் ஆய்வுரையையும் எழுத்தாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

கோடீஸ்வரன் எம்.பி மேலும் பேசுகையில்:
நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.

அதில் தமிழ்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இன்று ஜ.நா.வரைக்கும் சென்றுள்ளது. அதனைத்தீர்க்க எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சரியானபாதையில் நிதானமாக நேர்மையான தலைமைத்துவத்தின்கீழ் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

அதனை உடைக்க உள்ளுரிலும் சர்வதேசத்திலும் சதித்திட்டம் தீடட்ப்பட்டு ஒருசில குழுவினர் இயங்கிவருகின்றனர். அதற்கு நாம் பலிக்கடாவாக முடியாது.

அக்கூட்டமைப்பிற்கு நாம் எமது ஆதரவை நல்கி அதனை மேலும் வலுப்படுத்தவேண்டும். அதன்தலைவர் சம்பந்தன் ஜயாவையும் ஊக்குவிக்கவேண்டும். அது எமது கடமை. அப்போதுதான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்கலாம்.

த.தே.கூட்டமைப்பிற்குள் சில கருத்துமுரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் உடைக்கமுடியாது.
தமிழர்க்கு பலம் த.தே.கூட்டமைப்புத்தான். மக்கள்சக்தி அதற்குத்தான் இருக்கிறது. நாம் ஆதரவு வேண்டும். என்றார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -