உலக பல்கலைக்கழக விருது பெறும் இலங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர்..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கைப் பெண் எழுத்தாளர் வஸீலா ஸாஹிர் எழுதிய ‘மொழியின் மரணம்’சிறுகதை நூலுக்கு உலகத் தமிழ்ப் பல்கலைகழகத்தின் விருது கிடைக்கவுள்ளது. இந்நூல் கடந்த 2016 டிசம்பர் 03ஆம் திகதி இந்தியாவில் வெளியீட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வின் போதே இந்த நூலுக்கும் விருது கிடைக்கவுள்ளது. அமெரிக்க உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் சிறந்த எழுத்தாளர்களின் நூல்களைத் தெரிவு செய்து விருதும் சான்றிதழும் வழங்கும் விழா எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை இந்தியாவில் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.

சென்னை ரீ.ரீ. கே. சாலை, புது எண் 168, முதல் மாடியில் அமைந்துள்ள, மின்ஹால் மியூசிக் அகடமியில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என் வள்ளி நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழக வேந்தர், டாக்டர் செல்வின் குமார் சிறப்புரை நிகழ்த்துவதோடு, சென்னை மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர், முனைவர் ரவி தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்குகிறார். செல்வி பவித்ரா நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.

மினுவாங்கொடையைச் சேர்ந்த வஸீலா ஸாஹிர் எழுதிய நூலில் முஸ்லிம் பெண்களின் இல்லற வாழ்க்கையில் உள்ள சீரழிவுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உணர்வுபூர்வமாக எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய படிப்பினை நூல். காத்திரமான கருத்துக்களையும் படிப்பினைகளையும் கொண்ட இவரது நூல் படைப்புகள் குறுகிய காலத்தில் பல விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -