அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை சுமேதங்கரபுர பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற இளைஞனை 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (11) திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.ஏ.முஹீத் உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அதே இடத்தைச்சேர்ந்த 22வயதுடையவர் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.