இந்தியாவை பொறுத்த மட்டில் தமிழ் நாட்டின் தேர்தலில் இலங்கையர்கள் காட்டும் ஆர்வம் வட இந்திய தேர்தல்களில் காட்டுவதில்லை. காரணம் வட இந்தியர்களின் பேசும் மொழி. அதே போன்று தமிழ் நாட்டிலும் வட இந்திய தேர்தல் தாக்கம் செலுத்துவதில்லை. தமிழ் நாட்டு மக்களும் வட இந்திய தேர்தலில் ஆர்வம் காட்டுவதில்லை.காரணம் தமிழக கட்சிகள் எதுவும் வட இந்திய தேர்தலில் மோதுவதில்லை. அத்துடன் வட இந்தியர்களின் பேசும் உருது மொழியும் ஒரு காரணம்..
உ.பி க்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு என்ன
ஆனால் அரசியல் ரீதியாகவும் இலங்கை தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உ.பி க்கும் இலங்கை என்ற சிங்கள தீவுக்கும் அரசியல் ரீதியாக ஒரு தொடர்பு உள்ளது. எப்படி? அங்கு பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் லட்சக்கணக்கான முஸ்லிகள் கைது செய்யபட்டு இன்னும் உ.பி. சிறைகளில் உள்ளார்கள்.இது இலங்கையில் தமிழ் வாலிபர்கள் வடகிழக்கில் சிங்கள படைகள் கைது செய்வது போல்.தலித் இனப் பெண்களை நடு வீதியில் இழுத்து கற்பழிப்பது கூட்டுப் பாலியில் நடத்துவது வழமை .அதுவொரு சாதாரண விடயம்.இது வடகிழக்கில் தமிழ் பெண்கள் மீது நடந்த வன்புணர்வு இல்லையா? .
மேலும் அங்கு முஸ்லிகள் மீது சித்திரவதை ஆட்கடத்தல் கொலை கற்பழிப்பு அத்தனையும் இன்றும் நடந்து வருகின்றது ..காஷ்மீர் போன்று. இவைகள் இலங்கையில் தமிழகர்களுக்கு நடப்பது போன்று. அந்தளவு இந்தியாவின் வாஜ்பாய் அரசில் கொண்டு வந்த பொடா என்ற பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பது. இன்னும் அங்கு உள்ளது .
the Unlawful Activities Prevention Act (UAPA- 1965) the Terrorist and Disruptive Activities (Prevention) Act (TADA- 1985 ), the Prevention of Terrorism Act (POTA- 2002) 2002 In 2004, the UAPA which still remains on the book of statutes, was given more bite. In 2008, and again in 2012, further amendments were made, which contain many of the provisions of POTA.
தடா.பொடா சட்டத்தின் மூலமாக பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வாஜ்பாய் அரசு 2002 ல் கொண்டு வந்த பொடா சட்டத்தை 2008 .2012 ஆண்டுகளில் மேலும் பல மாற்றங்கள் செய்து சந்தேகத்தில் கைது செய்யப்படும் நபர் பிணையில் வெளிவர முடியாதவாறு சட்டம் இறுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் என்பது இலங்கை பயங்கரவாத சட்டத்திக்கு சமமானது .மற்றது முஸ்லிகள் கடைகளை எரிப்பது கொள்ளை அடிப்பது போன்ற செயல்களும் அடிக்கடி நடக்கும் .இது இலங்கை முஸ்லிம் கடைகளை சிங்கள சக்திகள் செய்வது போல் இல்லையா ? அப்படியானால் இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் அதே கொடுமைதான் உபியில் முஸ்லிம் தலித் மக்கள் அனுபவிப்பது .அங்கு சிறுபான்மை மக்கள் என்ற வகையில் முஸ்லிம் தலித் ஒற்றுமை அரசியல் மற்றும் இயக்க ரீதியில் உள்ளது இலங்கையில் தமிழன் சோனி மோதிக் கொள்வது ..
முஸ்லிம் தலித் என்ற இரண்டு சிறுபான்மை சமூகங்களின் வாக்கு இல்லாமல் அங்கு வெற்றியை தீர்மானிக்க முடியாது .இது இலங்கை தேர்தல் மாதரி இல்லையா? ஆனால் அங்கு சிறுபான்மை சமுகம் என்பதால் ஊடக ஆதிக்கம் அங்கு ஹிந்துகளின் கையில் உள்ளதால் செய்திகள் இரட்டடிப்பு மற்றும் செய்திகள் வெளி வருவதில்லை.
தேர்தல் நிலவரம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி தொடங்கி, கடந்த 8-ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 5 மாநிலங்களிலும் இன்று காலை 8 வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தியாவிலே மிகப்பெரிய மாநிலம் உ.பி. அங்கு உருது மொழி பேசும் 3 கோடி முஸ்லிம்கள் (20-22 வீதம்) உள்ளனர் சுமார் மூன்றரை கோடி தலித்கள் (22-25) உள்ளார்கள். முஸ்லிகளை விட தலித்கள் அங்கு அதிகம்.. இந்த 2 இனங்களும் ஒன்று சேர்ந்தால் ஆட்சி அவர்கள் கையில் ..இந்த ஒற்றுமையை கொண்டு வர இன்னும் அங்குள்ள முஸ்லிம்ளால் முடியவில்லை.அங்குள்ள தலித்கள் மிகவும் பின்தள்ளபட்ட நிலையில் ஏழைகளாக உள்ளார்கள்..எங்கும் எதிலும் நசுக்கபட்டு ஒடுக்கப்பட்டு சாதி வெறியால் தலித்கள் பயந்து நடுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
மாயாவதி குற்றச்சாட்டு
உத்தரபிரதேசத்தில் 403 மொத்த தொகுதிகளில் 303 தொகுதிகளுக்கு மேல் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் இரண்டுக்கும் அதிகமான மிகப்பெரிய அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அங்கு முஸ்லிகள் அதிகம் உள்ள தொகுதிகளில் வாக்களிப்பின் போது எந்த பட்டனை அழுத்தினாலும் அது தாமரை இல்லை சின்னத்திக்குதான் ( பிஜேபி ) வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக உபியை நான்கு முறை ஆண்ட வரலாற்று நாயகி முன்னாள் முதல்வர் மாயாவதி சற்றுமுன்னர் கருத்து தெரிவித்துள்ளார் . உபியை நான்கு முறை முதல்வராக மாயாவதி ஆண்டவர்.முன்னாள் ஆசிரியர்.. 15 ஆண்டுகளுக்கு பின்பு பிஜேபி உ .பி. யில் ஆட்சியை பிடித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்திலும் உத்தரகாண்டிலும் பாஜகவும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி உள்ளது. கோவா மற்றும் மணிப்பூரிலும் இழுபறி நிலை இருந்து வருகின்றது .அதாவது இந்த 2 மாநிலங்களிலும் பிஜேபி காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஓரளவு சம நிலைக்கு வென்றி பெற்றுள்ளது.ஆனாலும் அங்கு குதிரை பேரம் பேசி மோடி அரசு ஏனைய கட்சிகளை விலை பேசும் போது அங்கு மோடி ஆட்சி மலரலாம்..
உபியில் இந்த முறை மாயாவதி கட்சியில் மட்டும் 110 முஸ்லிம் வேட்பாளர்கள் 90 தலித் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதே போல் அகிலேஷ் யாதவ் கட்சியிலும் நூற்றுக்கு மேல் உள்ளனர்.! குறைந்தது 150+ முஸ்லிம் தலித் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள்
எதிரும் புதிரும் இணைவு
பாஜக வரக்கூடாது என்ற ஒரே கொள்கையில் எதிரும் புதிருமான லல்லு நிதிஷ் எப்படி பீஹாரில் கைகோர்த்தார்களோ அதே போல் உபியில் அகிலேஷ் மாயாவதி மெஜாரிட்டி குறையும் பட்சத்தில் இணையும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மாயாவதி உபியை நான்கு முறை ஆண்ட காலங்களில் தலித் முஸ்லிம் வாக்குகளின் இரும்பு கோட்டையை உருவாக்கியவர்.!
ஆனால் அவைகளுக்கு அவசியம் இல்லை என்று 3௦3 இடங்களையும் தாண்டி பாஜக வெற்றி பெற்று விட்டது..அதனால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் உ.பி.யில்
வெற்றியின் பின்னர் பாஜக கருத்து
முஸ்லிம்கள் தலித்துகள் ஓட்டு போடாமல்லா 303 க்கு மேல் ஜெயித்திருகிறோம் - பாஜக கருத்து.
கசப்பான உண்மைதான் இது.! கிட்டத்தட்ட 50% மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் தலித் என்ற இரண்டு சிறுபான்மை சமூகங்களின் வாக்கு இல்லாமல் பாஜக இவ்வளவு எண்ணிக்கை பெற்றிருக்க முடியாது சரியான மாற்றை வலுவான அணியை கட்டமைக்கவில்லை என்றால் வாக்கு இப்படி தான் போகும்.
பிஜேபி யின் தந்திரம் இனக்கலவரமாக மாறுமோ
ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் சாதியாய் பிரிந்த ஓட்டுகளை ஹிந்து ஓட்டாக கட்டமைத்து விட்டனர் மோடி அமித்ஷா உபியில்.!
இதுதான் ஆர்எஸ்எஸ் சின் திட்டம் கனவு.!இதுவரை கொள்கையாய் பேசபட்ட ஹிந்துத்வா முதல் முறையாக நடைமுறை படுத்தபடுகிறது உபியில்.!
சிறுபான்மையினர்களுக்கு எதிராக பெருன்மைவாதத்தை கிளம்பி வெற்றி பெற்றிருக்கிறார். இது தான் மிகவும் ஆபத்தானது. இதனை தான் அடுத்தடுத்து நடக்கப்போகும் தேர்தலிலும் பிஜேபி பயன்படுத்தும். இதனால் மிகப்பெரிய கலவரம் நடக்க வாய்ப்பு ஏற்படும்.
மக்கள் விரோத மசோதாக்கள் நிறைவேற்றும் வாய்ப்பு
அடுத்து தலையாய பிரச்சனை என்னவென்றால் மக்கள் விரோத மசோதாக்கள் பல பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் வரிசையாக காத்து கிடக்கிறது. இப்போது இந்த வெற்றியின் மூலம் அத்தனை மக்கள் விரோத மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.
இந்தியாவில் பிழைக்க முடியாமல் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் நபர்களின் வங்கி கணக்குகளில் கைவைக்கும் நடவடிக்கையை உடனே செயல்படுத்துவதற்குரிய தைரியத்தை இந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கொடுத்திருக்கிறது.
இன்னுமிருக்கும் இரண்டு ஆண்டுகளில் மக்கள் விரோத மசோதங்கள் பல நிறைவேற்றும் வாய்ப்பும், அதேநேரத்தில் இதனை எதிர்த்து போராட மக்கள் வராதபடி மக்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் வெறுப்பு பிரச்சாரம் வாய்ப்பையும் பிஜேபிக்கு இந்த தேர்தல் வெற்றி கொடுத்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு
இந்தியாவில் மிகப்பெரிய தேசவிரோத சக்திகள் சங்பரிவாரக் கும்பல்கள் தான் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், தேச விரோத சக்திகள் எந்த விதத்தில் வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது நிலவும் சூழலில் சங்பரிவார் அமைப்புகள் தான் மிகப்பெரிய தேசவிரோத சக்திகள் என்றும், இந்தியாவையும், மக்களையும் மதத்தின் பேரில் பிரிக்க முயல்வதாகவும் மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம்
பஞ்சாப் பொற்கோயிலுக்குள் அன்னை இரும்பு சீமாட்டி இந்திராகாந்தி ராணுவத்தை ஆனுப்பி அசிங்கப்படுத்தி விட்டார் என்று அன்னையின் பாதுகாவலராக இருந்த பஞ்சாப் சிங் இன பாதுகாப்பு அதிகாரி சுட்ட பின்பு நீண்ட காலமாக அகாலிதள் கட்சிதான் அங்கு ஆட்சி செய்து வந்தது .அந்தக் கட்சி ஒரு ஊழல் கட்சி என்று பாரிய குற்றச்சாட்டு இருந்து வந்தது .1௦ வருடங்களின் பின்னர் மீண்டும் இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.பாரிய வெற்றிதான்..பார்ப்போம். மிக விரைவில் தமிழ் நாட்டில் ஆட்சி கலைப்பு நடக்கும் .