ஈவு இரக்கமற்ற முறையில் அமெரிக்காவைத் தாக்குவோம் வடகொரிய எச்சரிக்கை

தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டால் ‘ஈவு இரக்கமற்ற’ முறையில் தாக்குதல் நடத்தப்படும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற பயிற்சிகளை வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகவே தாம் கருதுவதாகவும் இதனாலேயே தாம் இது குறித்து ஒரு கடுமையான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது என்றும் வடகொரியா தெரிவித்துள்ளது.

கடந்த பதினோராம் திகதி மட்டும், எதிரிகளின் போர் விமானங்கள் வடகொரிய கடல் மற்றும் வான் எல்லைப் பரப்புக்கு நெருக்கமாகப் பறந்து தம் மீது குண்டு வீசவும் அதிர்ச்சித் தாக்குதலை நடத்தவும் பயிற்சி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சிகள் தொடருமானால் அவை மீது தரை, வான், கடல், ஆழ்கடல் என அனைத்துப் படைகளும் இரக்கமற்ற முறையில் தாக்குதலை நடத்தும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் நான்கை வடகொரியா பரிசோதனை செய்திருந்தது.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -