ஹாசிப் யாஸீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மொரீசியஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வவிஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு (16) வியாழக்கிழமை சென்றுள்ளார்.
மொரீசியஸ் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சரின் அழைப்பை ஏற்று நான்கு நாள்விஜயத்தை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது இலங்கை, மொரீசியஸ் நாட்டு தொடரான உறவு குறித்தும் இரு நாட்டுவிளையாட்டுத்துறை மேம்பாடு குறித்தும் அந்நாட்டு அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன்பேசவுள்ளார்.
மேலும் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு மொரீசியஸ் நாட்டுமுதலீட்டாளர்களையும் சந்தித்து பிரதி அமைச்சர் ஹரீஸ் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.