யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தின்போது யாழ்.பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியொருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை மிக கேவலமான வார்த்தைகளால் பேசிய சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சியானது சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகின்றது.
குறித்த பொலிஸ் அதிகாரியொருவர் 'எருமை மாடு மாதிரி கதைக்கிறியே, நீ படிச்சிருக்கியா, மண்டைக்குள்ள சரக்கு இருக்கா' போன்ற வார்த்தைகளால் பேசியதுடன், ஊடகவியலாளர் ஒருவரை மிக கேவலமான முறையில் பேசியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.