ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியாவில் இயங்கி வரும் இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட நிறுவனமாக சமூகக்கல்விக்கான வலையமைப்பினால் இன்று (26) மாலை அதன் தலைவர் ஏ.எம்.எம்.அக்ரம் சதாமின் தலைமையில் கிண்ணியாவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தொகை நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன இனமத பேதமின்றி மூவின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதன் போது நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சமூக சேவைகளை வழங்கி வரும் இவ் அமைப்பானது கடந்த காலங்களில் பல்வேறு கல்வி ரீதியான பல உதவிகளையும் செய்துள்ளது.இளம் இளைஞர்களைக் கொண்டே இவ் அமைப்பு வளர்ச்சி பெற்று வருவதுடன் மேலும் பல வேலைத்திட்டங்களையும் எணிர்காலத்தில் செய்யவுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் அக்ரம் சதாம் தெரிவித்தார்.
மேலும் நுளம்பு வலைகளைப் பெற்றுக் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் இவ் அமைப்பிற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றனர்கள்.இவ் வைபவத்தில் அமைப்பின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.