ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்-
கல்குடா தொகுதி மக்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தவரும், முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான மர்ஹும் அல்-ஹாஜ் முகைதீன் அப்துல் காதரின் 13வது வருட நினைவாக வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலையத்தில் கடந்த வாரம் கல்குடா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீனின் தலைமையில் ஒன்று கூடல் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் முகைதீன் அப்துர் காதரின் பாசறையில் வளர்க்கப்பட்டு இன்றும் அவருடைய அன்பில் வாழ்ந்து வரும் கல்குடா சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்துபவர்களும், சமூக அக்கறையாளர்களும் கலந்து கொண்டதுடன் சமூக ஆர்வலரும் சரீஃப் அலி ஆசிரியர் ஒன்றியத்தின் இஸ்தாபக தலைவருமான சாட்டோ வை.எல்.மன்சூரும் கலந்து கொண்டு மர்ஹும் முகைதீன் அப்துல் காதர் நினைவாகவும் அவர் அரசியல் ரீதியாக கல்குடா சமூகத்திற்காக முன்னெடுத்த மறக்க முடியா விடயங்கள் சம்பந்தமாகவும் உரையாற்றினார்கள்.