வெற்றிலையுடன் பயன்படுத்தும் புகையிலைக்கும் இனித் தடை- புதிய சட்டம்

ண்பதற்கு விற்பனை செய்யப்படும் வெற்றிலை பக்கெட்டில் புகையிலை பயன்பாட்டை தடை செய்யும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பல் வைத்தியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புகைப்பதற்குப் பயன்படுத்தாத புகையிலை வகைகளை உற்பத்தி செய்வதனை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவே வெற்றிலைப் பக்கெட்டில் பயன்படுத்தும் புகையிலைக்கும் தடை உரித்தாவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் காலத்தின் தேவையாகும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வகையான புகையிலை பயன்படுத்தப்படுவதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

இம்முறை உலக வாய்ச் சுகாதார தினத்தை நினைவு கூறும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ளதாகவும் பல் வைத்தியர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -