
தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' எனும் நூல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்து விட்டு திரும்பினார்.
கொழும்பு-09, தெமட்டகொடயிலுள்ள கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அலுவலகத்தில் வைத்தே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன.
சுமார் 2 மணித்தியாலயத்துக்கு மேல் இடம்பெற்ற விசாரணையின் பின்னரே குற்றப்புலனாய்வுப் பிரிவில் இருந்து பஷீர் சேகுதாவூத் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.