கிண்ணியா, திருகோணமலை மாவட்டங்களில் பரவிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் முயற்ச்சியால் பல விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடந்த 4 வாரங்களாக திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பரவிவருகின்ற டெங்கு நோயினை கட்டுபடுத்த முதற்கட்டமாக கடந்த Feb 28ம் திகதியன்று சிறுவர் விசேட சிகிச்சை நிபுணர் ஒருவரும் பொது வைத்திய சிகிச்சை நிபுனர் ஒருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து தாதியர்களும் கிண்ணியா பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து விசேட டெங்கு நோய் கட்டுப்பாட்டு குழுவொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இந்த டெங்கு நோயினால் முதலாவது உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஞாயற்றுக்கிழமை சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக், பிரதி அமைச்சரின் செயலாளர் பாயிஸ் அடங்கிய குழுவொன்று அப்பிரதேசத்திற்கு சென்று வைத்திய மேலதிக தேவைகளையும் இதனை கட்டுபடுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
பின் அப்பிரதேசத்திற்கு விசேடமாக நடமாடும் டெங்கு நோய் ஒழிப்புக்கான புகை வெளியாக்கி இயந்திரம் பல வழங்கிவைக்கப்பட்டதுடன், மேலும் இக்கட்டுப்பாட்டு வேலைகளை செய்வதற்கும் தற்காலிகமாக மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்கும் container கொள்வனவிற்காக 10 லட்சம் ருபா பணத்தை பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிலமையை மீண்டும் அறிய கடந்த வெள்ளிக்கிழமையன்று டெங்கு பிரிவு பணிப்பாளர் டாக்டர் அசித்த, இலங்கை வைத்தியதுறையின் சிறு பிள்ளை வைத்திய நிபுனர்களின் தலைவர் லக்மல் டீ சில்வா ஆகியோரின் தலமையிலான குழுவொன்றையும் சுகாதார பிரதி அமைச்சரின் விசேட வேண்டுகோளுக்கினங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 12,13ம் திகதிகளில் அங்குள்ள நிலமைகளை அறிந்துகொண்டதுடன். டெங்கை கட்டுப்படுத்த விசேட திட்டங்களையும் செய்யவுள்ளனர்.
அத்துடன் கிண்ணியா வைத்தியசாலையில் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவொன்றை 48 மணித்தியாலத்திற்குள் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரிவுக்கு தேவையான 5 டாக்டர் , 10 தாதியர்கள், 2 சிறுபிள்ளை வைத்திய நிபுணர்கள் , 2 மருத்துவ அதிகாரிகளும் வழங்குவதற்கு பிரதி பொதுப்பணிப்பாளர் அமல் ஹர்ஷா அவர்களிடம் சுகாதார பிரதி அமைச்சர் அனுமதி பெற்று எதிர்வரும் 2 தினங்களுக்குள் அவர்கள் சேவையாற்றவுள்ளனர்.
மேலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக தொடருமாக இருந்தால் நீர்கொழும்பு வைத்தியசாலையில் உள்ள விசேட டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவுக்கு நோயாளர்களை அனுப்புவதற்குரிய நடவடிக்கையினை உரிய பொறுப்பதிகாரி டாக்டர் லக்மல் அவர்களுடன் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் பேசி அனுமதி பெற்றுள்ளார். ஆகவே மத்திய சுகாதார அமைச்சு இவ்விடயம் சம்மந்தமாக பூரண அவதானிப்புடன் உள்ளதுடன் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராகவுள்ளது.
எனவே பொது மக்களாகிய நீங்கள் உங்கள் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருந்து உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் இக்கொடிய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுவதோடு நோய்களையும் சோதனைகளையும் நம்மையெல்லாம் படைத்த இறைவனே நமக்கு தந்துகொண்டிருக்கின்றான் எனவே இப் பெரும் சோதனையிலிருந்து நம் சமூகத்தை பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவன் உதவ வேண்டும் எனவும் அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்.