டெங்கு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் நடவடிக்கை - இம்ரான் எம்.பி

ஊடகப்பிரிவு-
கிண்ணியாப் பிரதேசத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நிலவி வரும் டெங்கு காய்ச்சல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து கிண்ணியா பிரதேச மக்கள் டெங்கு நோயினால் படும் அவஸ்தைகள் குறித்து தெளிவு படுத்தினார்.

இதனை செவிமடுத்த பிரதமர் டெங்கு கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தனது தேசிய கொள்கைகள் பொருளாதார விவகார அமைச்சு மூலம் முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதியினை உடன் விடுவிக்குமாறு ராஜாங்க அமைச்சர் நிரோ~ன் பெரேராவுக்கு பணிப்புரை விடுத்தார். திருகோணமலை அரசாங்க அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறும் இதற்காக சகல தரப்பினரதும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்த விடயங்களைத் துரிதப்படுத்தும் பொருட்டு ராஜாங்க அமைச்சர் நிரோ~ன் பெரோவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது. இந்த விடயம் குறித்து தனிப்பட்ட அவதானம் செலுத்தி தனக்கு அவ்வப்போது தெரியப்படுத்துமாறு பிரதமர் தனக்கு அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -