யாழில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூவர் பெறுமதியான பொருட்களுடன் கைது..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவரை யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று(18) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இம் மூன்று சந்தேக நபர்களும் கடந்த காலங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை சுமார் 80 இலட்சத்திற்கும் மேலதிகமான நகை மற்றும் பணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.



குறிப்பாக வழிப்பறிக் கொள்ளை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளதுடன் அத்துடன் சிறுவர்களை பயன்படுத்தி வீடுகளுக்குள் இறக்கி பணம் நகை பொருட்களை கொள்ளையிடும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து நவீன கையடக்க தொலைபேசிகள் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் புற நகர் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். மேலும் கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் அவ் விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையில் யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன் தலைமையிலான குழுவினரே இக்கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -