மகாராஷ்ட்ராவின் துலே பகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்க மருத்துவர் தாமதப்படுத்தியதாக நோயாளியின் உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது கைகலப்பாக மாறியது. அப்போது, நோயாளியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மருத்துவரை கடுமையாகத் தாக்கினர். இதில், மருத்துவரின் முகம், கண், கழுத்து, மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
இதனையடுத்து, காயமடைந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, துலே பகுதியில் மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
tamil-news/india
தாக்கியது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள்