க.கிஷாந்தன்-
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் வில்பிரட்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்விபத்து 06.03.2017 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் வில்பிரட்புர பகுதியிலிருந்து அட்டன் நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி அட்டன் நகர பகுதியிலிருந்து அட்டன் பொலிஸ் நிலைய பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே விபத்துக்குள்ளாகி படுங்காயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.