கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் இடப்பற்றாகுறையை தற்காலிகமாக நீக்க பைஷால் காஷிம் நிதி ஒதுக்கீடு

உமர் அலி -

கிண்ணியாவில் டெங்கு நோய் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து கடந்தவாரம் சுகாதார அமைச்சின் குழுவினருடன் விஜயம் செய்த பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்களிடம் வைத்தியசாலை நிருவாகம் சுட்டிக்காட்டிய பிரச்சினைகளில் விடுதிகளில் இடம் போதாமை பிரதானமானதொன்றாகும் .

அதனைத்தொடர்ந்து அமைச்சர் அங்கிருக்கும் மருந்துக்களஞ்சியத்தினை தற்காலிகமாக இரு கொள்கலன்களுக்கு மாற்றிவிட்டு தற்போதுள்ள மருந்துக்களஞ்சியமுள்ள இடத்தினை விடுதி ஒன்றாக பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார் . அதற்கான நிதியினை உடனடியாக அனுப்பிவைக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்தார்.அதிகாரிகளும் உடனடியாக இயங்கினார்கள்.
கொல்கலன்களுக்கான பெறுமதி தொடர்பான விலைமதிப்பீடுகளை பெற்றுத்தருமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு கொழும்பிலிருந்து அதிகாரிகள் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

இருப்பினும் இந்த நடவடிக்கை சாதாரண காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் ,தற்போது நிலவுகின்ற அவசர நிலையின்போது இந்த நடைமுறைகளை தாண்டியதும் விசேடமான பொறிமுறை ஒன்று அவசியமானது என்று பிரதி சுகாதார அமைச்சரின் அதிகாரிகளுக்கு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் கயல்விழி அவர்கள் விண்ணப்பித்தார்.அதனைத்தொடர்ந்து குறித்த நிதியினை திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நேரடியாக கையாண்டு இரு கொள்கலன்களையும் கொள்வனவுசெய்து ஏனைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சிலிருந்து உடனடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென ரூபா 17 இலட்சத்துப் பதினையாயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான சுகாதார நிலைமையினை பல்வேறு அரசியல் சக்திகள் தமது கட்சிகளின் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள முண்டியடித்துக்கொள்கின்றார்கள்,எது எப்படியிருந்தாலும் டெங்கு தீவிரநிலையை அடைந்த செய்தி எட்டியதில் இருந்து மத்திய சுகாதார அமைச்சிலிருந்து பல மருத்துவக்குளுக்களை பல்வேறு நடவடிக்கைகளுக்காக கிண்ணியாவுக்கு அனுப்பிவைத்ததுடன் பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீம் அவர்களும் கிண்ணியாவுக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -